தலைமைப் பாதிரியார் (bishop) தேவைகளை கவனித்துக்கொள்ள மூன்று கன்யாஸ்திரீகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். ஒருநாள் அவர்கள் மூவரும் சந்தித்து வம்பளந்து கொண்டிருந்தபோது அவர்கள் பேச்சு அந்தப் பாதிரியாரைப் பற்றித் திரும்பியது. “சிஸ்டர், போனவாரம் ஒருநாள் நான் அவர் ரூமை சுத்தப் படுத்தும்போது, அங்கு நிறைய ஆபாசப் படங்கள் போட்ட சில பிறமொழிப் பத்திரிகைகள் இருந்தது தெரியுமா?” என்றாள் ஒரு சிஸ்டர். “சரி, அவற்றை நீ என்ன செய்தாய்?” என்று மற்ற இருவரும் கேட்க, “பாதிரியார் ரூமில் அவை எதற்கு? அதனால் நான் அவ்வளவையும் கிழித்து குப்பையோடு போட்டு விட்டேன்.” என்றாள் அவள்.
இரண்டாவது கன்யாஸ்திரீ, “நான் போனவாரம் அவர் மேஜை டிராயரை சுத்தப் படுத்தும்போது பின்புறத்தில் சில ஆணுறைகள் (condom) மறைத்து வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தேன்” என்றாள்.” நீயும் அவற்றை குப்பையோடு கொட்டிவிட்டாயா? என்றனர் மற்ற இருவரும். “இல்லை இல்லை, நான் அவை எல்லாவற்றையும் ஜாக்கிரதையாகப் பிரித்து ஒரு குண்டூசியால் ஒவ்வொன்றிலும் ஓட்டைகள் போட்டு, பிறகு பத்திரமாக முன்பிருந்த மாதிரியே மடித்து அதே இடத்தில் வைத்து விட்டேன்” என்றாள் அந்த விஷமக்கார சிஸ்டர்.
மூன்றாவது சிஸ்டர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் !
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.