மரணத்துக்கப்பால்! அசைவ நகைச்சுவை நேரம்!

விஜயனும் மதிவாணியும் உண்மைக் காதலர்கள். தம் மணநாளன்று ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர்:- இருவரில் யார் முதலில் இறந்தாலும் (©sexiqueens.blogspot.com)அவர் மரணத்துக்கப்புறம் நூறுநாட்கள் ஆனபிறகு இன்னொருவரிடம் ஆவியாக வந்து மரணத்துக்கப்பால் தான் வாழும் நிலையை விவரிக்கவேண்டும்
துரதிஷ்டவசமாக விஜயன் ஒரு விபத்தில் மரணமடைகிறான். நூறு நாட்களை எண்ணிக்கொண்டே வரும் மதிவாணி, நூறாவது நாள் ஒரு இருட்டறையில் உட்கார்ந்து தன் கணவன் நினைவை மனதில் முன்னிலைப் படுத்துகிறாள். சிறிது நேரத்தில் “’வாணி, வாணி, நான் வந்திருக்கிறேன். என் குரல் கேட்கிறதா?” என்று ஒரு குரல் அவள் மனதில் கேட்கிறது.

“குரல் கேட்கிறது, டார்லிங், ஆனால் உங்களைப் பார்க்க முடியலயே”

“அது முடியாது, கண்ணே. நாம் பேசிக்கொள்ளலாம். ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாது, தொட முடியாது.”’

“சரி, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீங்கள் நலமா?”

“மிகுந்த நலமாக உள்ளேன். இயற்கைச் சூழல். கவலையில்லாத வாழ்க்கை.”

“நீங்கள் இருக்கும் இடத்தை விவரியுங்களேன்”

“நீல வானம். பசும் புல் தரை. மெல்ல வீசும் தென்றல். இங்குள்ள பசுக்கள் தலை நிமிர்த்தி பார்க்கும்போது அவற்றின் கண்களே எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?”

“உங்கள் தினப்படி செயல்கள்?”

“சூர்யோதயத்துக்கு முன் துயிலெழுவோம். நல்ல காலையுணவு. பின் மதியம்வரை காதல் செய்வது. பகலுணவு. சிறு தூக்கம். பிறகு மாலை வரை காதல் செய்வது. இரவு உணவு. மீண்டும் தூக்கம் வரும்வரை காதல் செய்வது”

“என்ன, ஸ்வர்க்கத்தில் வழிபாடு, தியானம் இதெல்லாம் இருக்கும் என்று சொல்வார்களே?’’

“ஸ்வர்க்கமா? நான் இப்போது ஒரு பெரிய மாட்டுப் பண்ணையில் உள்ள ஒரேஒரு காளைமாடாக்கும்!”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.