தீர்வு என்ன? அசைவ நகைச்சுவை நேரம்!

ஒரு பெண்கள் கல்லூரியின் மனவியல் (psychology) பேராசிரியர் தன் மாணவிகளிடம் ஒரு கேள்வியை முன்வைத்தா:
”தனியாக நீ ஒரு படகில் பயணம் செய்துகொண்டிருக்குக்போது, ஒரு கப்பல் நிறைய காமக் களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாலுமிகள் தம் கப்பலில் எதிர்ப்படுகிறார்கள். இந்த நிலைமையில் (situation) ஆபத்தைச் சமாளிக்க நீ என்ன செய்வாய்?”
வகுப்பிலேயே மிக அமைதியான ஒரு மாணவி சொன்னாள்: “என் படகை எதிர்த் திசையில் திருப்பி, மிக வேகமாகத் துடுப்பைத்தள்ளி தப்பிக்க முயல்வேன். “

சற்று தைர்யசாலி எனப் பெயர் பெற்ற ஒரு மாணவியின் பதில்: “பயப்படாது என் வழியில் நான் தொடர்ந்து செல்வேன். வம்பு செய்பவர்களை என் கத்தி கவனித்துக் கொள்ளும்” என்று தன்னிடம் இருந்த ஒரு பெரிய சுவிஸ் ராணுவக் கத்தியை (swiss army knife) எடுத்துக் காட்டினாள்.

மூன்றாவது மாணவி எல்லா மாணவர்களிடம் நெருங்கிப் பழகும் அழகி. அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள்; “எனக்கு situation புரிகிறது ப்ரொஃபெஸர், ஆனால் அதில் பிரச்சினை என்ன இருக்கிறது? தீர்வே தேவையில்லையே. இயற்கை அதைக் கவனித்துக் கொள்ளும்.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.