யாரை மணக்க ? அசைவ நகைச்சுவை நேரம்!!

கல்லூரியில் படிக்கும் கலா ஒருநாள் அவள் அப்பாவிடம் “அப்பா, நான் அடுத்தவீட்டு அருணை விரும்புகிறேன்; அவனை எனக்குக் கட்டிவையுங்கப்பா” என்று கெஞ்சினாள். “ அந்த அருண் பயலா? அவன் ஒனக்கு அண்ணன் உறவாறதம்மா, அதணால அவன் வாணாம்மா” என்று குரலை தாழ்த்தி அப்பா பதில் சொன்னார்.

அடுத்த வாரம், “அப்பா அப்பா, நான் பக்கத்துத்தெரு பாலனை கட்டிக்க ஆசைபடறேன், சரிதானா?” என்று கேட்ட கலாவுக்கு அந்த பாலனும் அவளுக்கு அண்ணன் முறை, அதனால் அவனும் வேண்டாம் என்று தந்தை மறுத்துவிட்டார்.

ஒரு மாதம் கழித்து, “ அந்த அருண், பாலா இருவர்பேரிலும் எனக்கு சும்மா ஒரு ஆசைதான், அதனால அவங்க வேணாம்னு நீங்க சொன்னபோது சரிதான்னு விட்டுட்டேன். இப்போ என்னோடு கூடப் படிக்கும் மேலத்தெரு மூர்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கிறோம். அவனை கட்டிவையுங்கப்பா” என்ற கலாவுக்கு, “அவனும் உனக்கு அண்ணன் தானம்மா அதனால் அவனும் வேண்டாம்மா” என்று தந்தை மறுத்தவுடன் கலா விக்கி விக்கி உரக்க அழத் தொடங்கினாள்.

மகள் அழுவதைக் கேட்ட அவள் அம்மா சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்து “என்ன கலா, ஏம்மா இப்படி அழறே” என்று கேட்டாள். தந்தை சொல்லவேண்டாம் என்பது போல அம்மாவுக்குத் தெரியாமல் ஜாடை செய்வதைப் பொருட்படுத்தாமல் “பாரும்மா, நான் ஆசைப்பட்ட அடுத்த வீட்டு அருண், பக்கத்துதெரு பாலன், மேலத்தெரு மூர்த்தி இவங்க யாரையும் கட்டிக்கக் கூடாதுன்னு அப்பா சொல்றார். ஏன்னா அவங்க எல்லாம் எனக்கு அண்ணன் முறையாம்” என்று விசித்துக் கொண்டே அம்மாவிடம் கொட்டிவிட்டாள் மகள்.
தாய் கலாவிடம் சொன்னாள், “அந்த மூணு பையங்களும் உனக்கு அண்ணன் முறையே இல்லைம்மா. நீ போஸ்ட்மாஸ்டர் கோபாலனின் பிள்ளை ஸ்ரீராம், தாசில்தார் இஸ்மாயில் மகன் அஹமது, L.I.C. ஏஜண்ட் சேவியர் மகன் ஜோசஃப், மளிகை மாணிக்கம் செட்டியார் மகன் பழனியப்பன், பால்காரன் மாரியோட மகன் சின்னையன் இந்த அஞ்சு பேரத்தவிற வேறு யாரை வேண்டுமானாலும் கவலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.