அசைவ நகைச்சுவை நேரம்!! மூன்று முதியவர்கள்!

பல வருஷங்களுக்குப் பிறகு அந்த மூன்று நண்பர்களும் தம் கம்பெனி, அவர்களிடம் ஓய்வூதியம் பெறும் அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சந்தித்தனர். விழா முடிந்ததும் அவர்கள் ஒரு பக்கமாக அமர்ந்து தமது வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு 70 வயதுக் கிழவர் சொன்னார்: — “நான் சென்ற வருஷம் என் மனைவி இறந்துவிட்ட பிறகு தனிமையைத் தாள முடியாமல் ஒரு 20 வயதுப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டேன். இப்போது அவள் ஆறு மாதம் கர்ப்பம். என்னால் இப்போதும் ஒரு பெண்ணைத் தாயாக்க முடிகிறது எனப் பெருமைப் படுகிறேன்”

பக்கத்தில் இருந்த 75 வயது முதியவர் கூறினார்: “படுத்த படுக்கையாக இருந்த என் மனைவி காலமான போது, அவளைப் பார்த்துக் கொண்ட நர்ஸையே நான் கல்யாணம் செய்துகொண்டேன். இப்போது அவள் என்னை இரட்டைக் குழந்தைகளுக்குத் தகப்பன் ஆக்கி இருக்கிறாள் தெரியுமா ?”

மூன்றாமவர்க்கு வயது 80. அவர் சொன்னார் — ” நான் அந்த நாள்லே காட்டுப் பக்கம் கொக்கு சுடறத்துக்க்காகப் போவேன், நினைவிருக்கா? இப்பல்லாம் துப்பாக்கி சுடறதில்லை. கொஞ்சநாள் முன்னே ஒருநாள் காட்டுப் பக்கம் போனபோது, பறந்துகிட்டிருந்த ஒரு கொக்கைப் பார்த்து என் கைத்தடிய நீட்டி ‘டுப்’ என்றேன். அது குண்டு வெடிச்சாப்பல சத்தம் போட்டது. என்ன ஆச்சரியம் – அந்தக் கொக்கு தரையில் விழுந்து இறந்தது. அதை எடுக்கப் போனேன். “சார், அது நான் சுட்ட கொக்கு” என்றபடி என் பின்பக்கத்திலிருந்து துப்பாக்கியுடன் ஒரு வேட்டைக்காரன் வந்தான்.”

பாவம், மற்ற இரு நண்பர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.