“உரையிலே தக்காரு”!அசைவ நகைச்சுவை நேரம்!!

“உரையிலே தக்காரு”
நகைச்சுவை நடிகர்களின் ஜாம்பவான் N.S. கிருஷ்ணன் அவர்கள் ஒரு படத்தில் “தரையிலே உக்காரு’’ என்று சொல்வதற்குப் பதில் “உரையிலே தக்காரு” என்று முதல் எழுத்துகளை மாற்றிச் சொல்வார். இதேபோல் இன்னும் ஓரிரண்டு சொற்றொடர்களையும் மாற்றிச் சொல்வார் என்று ஞாபகம். இந்த உத்தியை ஆங்கிலத்தில் ஸ்பூனரிஸம் (spoonerism) என்பார்கள்.

{ஒரு சின்ன லெக்சர் – வேண்டாதவர்கள் இந்தப் பத்தியை விட்டுவிடலாம்:

வில்லியம் ஸ்பூனர் (1844-1930) ஆக்ஸ்ஃபோர்டில் வார்டனாகவும் கிறித்தவ மத போதகராகவும் இருந்தவர். அவர் அவ்வப்போது இப்படி சொற்களில் ஆரம்ப ஒலிகளை மாற்றிப் பேசுவார்.(Metathesis). உதாரணமாக ‘missed the history lஎctures’ என்பதை ‘hissed the mystery lectures’ என்றும், ‘dear old queen’ என்பது ‘queer old dean’ என்றும் ‘wasted a whole term’ என்பதை ‘tasted a whole worm’ என்றும் மாற்றிவிடுவார். இவரைப் பற்றி ஒரு அசைவ ஜோக்: அவருடைய சர்ச் இசைக்குழுவில் சேர எந்தப் பெண்ணும் முன்வரவில்லையாம். ஏனென்று விசாரித்ததில் அவர்கள் சொன்ன காரணம்: “As a child he was always sucking his fingers !” }

சரி, தமிழ் அசைவ நகைச்சுவைப் பகுதியில் ஸ்பூனரிஸம் பார்ப்போமா?

ஒரு தேர்த் திருவிழா. தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுக்கும் ஆயிரம் பேரைவிட தேரில் அமர்ந்து எல்லோரும் தரும் தேங்காய்களை உடைத்து சூடம் ஏற்றி திருநீறு தரும் பூசாரிகளும், முன்சக்கரத்துக்குப் பக்கத்தில் மண்டியிட்டு தேருடன் கூடவே தத்திச் சென்று, நிற்கவும், நகரவும்,தெருமுனைகளில் திரும்புவதற்கும் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கவும் முட்டுக்கட்டை போடும் தச்சரும் (கிராமங்களில் அவரை ஆசாரி என்பர்) அவர் உதவியாளரும் தான் மிக முக்கியமானவர்கள். இவர்களுக்கு விழாவுக்கு முன்னதாகவே கூழ் வாங்கிசெல்லும் உரிமை உண்டு.
ஊருக்கெல்லாம் கூழ் ஊத்துவதற்காக மிராசுதாரர் தன் வீட்டில் ஒரு பெரிய சால் நிறையக் கூழ் தயாரிக்கத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு தேரோட்டத்தைக் கண்காணிக்கப் போய்விட்டார். மதியம் கூழ் ஊத்தும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து பார்த்தால் அரைசால் அளவு தான் கூழ் இருந்தது. கோபமாகக் கேட்டார்: “என்னடீ, அதுக்குள்ளாற பாதி கூழ் ஆயிடிச்சா?”

அவர் மனைவி சொன்னாள். பூசாரி ஆள் பண்ண வேலைங்க”. ஆனால் மிராசுதாரரும் அவர் மனைவியும் ஸ்பூனரிஸத்துக்கு அடிமைகள்.

அவங்க சமையக்கார பொம்பிளை பேரு ஆதிலக்ஷ்மி, சுருக்கமா ஆதி. அவளை அங்கு காணாத்தால் எங்கே என்று மிராசுதார் விசாரித்தார். அவர் மனைவி சொல்ல விரும்பிய பதில்: ‘’ஆதி கூட்டத்துக்கு போயிட்டா.’
இன்னும் இரு அசைவ ஸ்பூனரிஸங்கள்:

“இதோ பாரு, சாம்பு ஊர்.”

“ இப்படி ஒண்டில குடிக்கலாமா?

நீங்களும் இப்படி எழுதலாமே!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.